Monday, March 15, 2010

நான் அறிந்த சிலம்பு (உரை பெறும் கட்டுரை) - பகுதி 5

உரை பெறும் கட்டுரை

அன்று முதல்
மழைவளம் இழந்து
வறுமையெய்தி
அம்மை நோயும்
தொழு நோயும்
பிணி பலவும்
பாண்டி நாட்டில் தொடர்ந்திருக்க...

இடர் தழைய விளைந்தனன்
கொற்கை வேந்தன்
வெற்றிவேல் செழியன்.

பத்தினி கண்ணகியைச்
சாந்தப்படுத்தவென்று
பலிக்களத்தில்
பொற்கொல்லர் ஆயிரம்
பலியிட்டனன்.
வேள்வி விழாச் செய்தனன்.

நங்கையவளும் சாந்தமுற
நாட்டில் நல்மழை பெய்தது;
நோயும் துன்பமும் நீங்கியது.

இது கேள்வியுற்ற
கொங்கு மன்னன் இளங்கோசர்
தம் நாட்டகத்து
நங்கைக்கு விழாவெடுத்து
நற்சாந்தி செய்திட
மழைவளம் என்றும்
பொய்க்காமல் நிலைத்திட்டது.

அதுகேட்ட
கடல்சூழ் இலங்கைவேந்தன்
கயவாகு அவனும்
பலிபீடம் நிறுவிப்பின்
கோவிலொன்றும் கட்டினான்.

துன்பம் அழித்து
இன்பவரம்
அள்ளித் தரும்
அழகு பத்தினிக்கு
ஆண்டுதோறும் ஆடித்திங்களில்

சுற்றம்சூழ விழாவெடுத்துச்
சீரும் சிறப்பும் செய்திருக்க
மாரியது பொய்க்காமல் பொழிந்து
வளம்பல பெருகிப்
பிழையாமல் விளையும்
விளைச்சல் நாடாயிற்று.

சோழன் பெருங்கிள்ளியும்
"வரமும் வளமும்
எதுவாயினும்
தப்பாமல் தரும்
இவள்தானொரு
பத்தினிக் கடவுள்" என்று
நித்தம் விழா எடுத்துச்
சிறப்பித்து நின்றனன்.

சிலம்பின் வரிகள்(உரை பெறும் கட்டுரை) இங்கே....

6 comments:

ராமலக்ஷ்மி said...

அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். தொடருங்கள்!

கோபிநாத் said...

எளிமையாக ரசிக்கும் படியாக இருக்கு இந்த பகுதி ;-)

ஜீவி said...

சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.
வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

பத்தினித் தெய்வத்திற்குப் பல மனித உயிர்களைப் பலி கொடுத்தான் தென்னவன் என்பதைப் படித்து பதைக்கிறது உள்ளம்!

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி, கோபி, ஜீவி.

பாச மலர் / Paasa Malar said...

உண்மைதான் குமரன்...கொடுமையானதாக இருக்கிறது...இந்தச் செய்தி இதைப்படிக்கும்வரை கேள்விப்பட்டதாகவும் இல்லை..