இலக்குகளை இயம்பி நின்ற
இலக்கியப்பூக்களால்
இதயங்களில் வேரூன்றிய
தமிழ்க்காதல்,
மனதின் இறுக்கங்கள் தளர்த்திய
இளவேனில் காலமன்று.
தமிழே டாமில் ஆகித்
தன் முகவரி
தானே தேடியலைந்து
தேக்கம் கண்டு வெம்பி நிற்கும்
இலையுதிர்காலமின்று.
பிறநாட்டுச் சாத்திரங்கள்
தமிழில் மொழிபெயர்ப்போம்
என்றதொரு காதல்.
டாடி, மம்மி,
தேங்க்ஸ், ரோடு
எல்லாமே தமிழே
என்பதொரு காதல்.
தாயாம் தமிழை
அன்னை இல்லத்தில் வைத்து
அழகு பார்த்ததொரு காதல்.
முதியோர் இல்லத்தில்
முடக்கிப் பார்க்கும்
இயலாமையில் ஒரு காதல்.
தற்காப்புக் காதலாய்ச்
செதுக்கி நின்றதொரு காதல்.
தற்கொலைப் பாதையில்
சிதைந்து நிற்பதொரு காதல்.
இலையுதிர்காலம் இன்று..
என்றாலும்
இளவேனில் வருமென்று
சற்றும் குறையாத நம்பிக்கையுடன்
முற்றிலும் எம்மை இயக்குகிறது
தணியாத தமிழ்க்காதல்.
Monday, May 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நன்று ;)
//இலையுதிர்காலம் இன்று..
என்றாலும்
இளவேனில் வருமென்று
சற்றும் குறையாத நம்பிக்கையுடன்
முற்றிலும் எம்மை இயக்குகிறது
தணியாத தமிழ்க்காதல்//
நம்பிக்கை தானே வாழ்க்கையே... தமிழ் மேலுள்ள காதல் நிரம்பி வழிகிறது. வாழ்த்துக்கள்
தமிழ்க் காதல் என்றும் தணியாத தாபம் கொண்டது. காலத்தின் மேல் ஏற்றி கருத்தைச் சொன்னது அழகாக இருந்தது.
நன்றி கோபி....
நன்றி எட்வின்....நம்பிக்கைதான்....
நன்றி ஜீவி...ரொம்பவும்தான் மாற்றிவிட்டது காலம்...சரிசெய்வதுதான் கடினம்...நம் தவறுகளையெல்லாம் நியாயப்படுத்திப் பார்க்கிறோம்..
அந்த நம்பிக்கைதானே வாழ்க்கையையும் எடுத்துச்செல்கிறது
நம்பிக்கையை நிறைவேற்ற நிறைய் பேர் இருக்கிறோம் இல்லியா கிருத்திகா..
Post a Comment