மழையின் சத்தம்..காற்றின் பிளிறல்..கூடவே...டங் டங் என்று உலோகச் சத்தம்...சட்டென்று புரிந்தது...ஆஹா...இது ஆலங்கட்டி மழையாச்சே....நான் ஓரிரு முறை இந்த வளைகுடாப் பகுதியில் இதைப் பார்த்திருந்தலும்..என் மகள் பார்த்திருக்கவில்லை...பயந்த அவளை ஒரு வழியாகச் சமாதனப்படுத்தி இறங்கிப்போய்க் கீழே பார்த்தால் ஒரே வெள்ளம்
ஓடிக் கொண்டிருக்கிறது சாலையில்...
தண்ணீரில் மிதக்கும் ஐஸ் கட்டிகள்....
அடடா...வித்தியாசமான சிலீர் அனுபவம்.....
ஆனாலும் எத்தனை எத்தனை பேர் இங்கே இதனால் கஷ்டப்பட்டார்களோ
தெரியவில்லை...
மழைக்கு முன் வந்த காற்று..
செம்மணல் மண்டலம்....
புகைப்படக்கருவி வழியே...
(மேலே உள்ள புகைப்படங்கள்: நண்பர் விஜயக்குமார் எடுத்தவை..)
(கீழ்க்காணும் புகைப்படங்கள் என் கணவர் அலுவலகத்திலிருந்தபடி வெளித்தோற்றத்தை எடுத்தவை)
10 comments:
இந்த அளவு பெரிய கட்டிகள் இல்லையென்றாலும் இதே போன்ற புயலுமாய் கடந்தவாரம் இங்கும் கோடை மழை. அடித்த காற்றில் படம்தான் எடுக்க முடியவில்லை:)!
பகிர்வுக்கு நன்றி பாசமலர்:)!
ஆகா...இங்க கூட (ஷார்ஜா)லைட்டாக சூடு குறைஞ்சது. ம்ம்..நல்ல படங்கள் ;)
ஆமாம்...ராமலக்ஷ்மி..கோபி...இன்னும் 3 நாள் இப்படித்தானாம்...இன்னிக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை..
நன்றி..தலைவன் குழுமம்..
இப்படித்தான் நாலஞ்சு மாசம் முன்னாடி துபாய்க்கும் வந்திச்சு...நானும் படம் எடுக்காமவிட்டுட்டேன்.
இங்கயும் காலையில் ஒன்றிரண்டு தூறல் விழுந்தது.
பகிர்வுக்கு நன்றி பாசமலர்!
நன்றி சுந்தரா..உண்மையில் மிக வித்தியாசமான அனுபவம்...ஆனால் பலரும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்...
இங்கும் காலையில் ஓரிரண்டு துளிகள் கையில் பட்டது.
ஆஹா மழை வருமோ என்று நினைத்தேன் . ஏமாற்றி விட்டது.
படங்களுக்கும் பகிர்வுக்குஇம் நன்றி பாசமலர்.
அந்த வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை மலர். மிகவும் நல்ல அனுபவமாய் இருந்திருக்கும் இல்லையா
நல்ல அனுபவம்தான் வல்லிம்மா..கிருத்திகா....ஆனாலும் பாவம் ..பாலத்தில் போய்க்கொண்டிருக்கும்போது தண்ணீர் பெருகி..அதில் காருடன் மூழ்கி ஏழெட்டுப் பேர் இறந்திருக்கிறனர்.
Post a Comment