Sunday, March 29, 2009

காலத்தின் கட்டாயம்

நித்தமொரு
புத்தம்புது விடியல்

பழகிய நட்புடன்
பகையோ பகை
விலகிய நட்புடன்
இழையோ இழை

நேற்று குலுக்கிய கைகள்
இன்று
நெரிக்கும் கழுத்துகள்

இச்சையாய் அனிச்சையாய்
இதயம் கழற்றி எறிந்து
இங்கிதமின்றி அறிக்கைகள்
இரைப்பை நிறைப்புகள்

பணப்பைக்குப் பண்டமாற்றாய்ப்
பல உயிர்ப்பாதகங்கள்
பலியாடுகள் பொதுமக்கள்

மீண்டும்
தேர்தல் தேர்
உலா வரும் நேரம்..

பழைய பாத்திரங்களுடன்
புதிய சரித்திரம்
புதிய மேடையில்
பழைய நாடகம்
தற்காலிக அரங்கேற்றம்.
தவிர்க்க முடியாத
காலத்தின் கட்டாயம்.

22 comments:

Thamiz Priyan said...

காலத்தின் கட்டாயம்! பெயர் ஜனநாயகம் என்ற பண நாயகம்!

பாச மலர் / Paasa Malar said...

உண்மைதான் தமிழ் பிரியன்...என்னத்த சொல்றது..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது காலத்தின் கட்டாயம் எனக்கு புரியாத புதிர்.. :))

ஆயில்யன் said...

//தற்காலிக அரங்கேற்றம்.
தவிர்க்க முடியாத
காலத்தின் கட்டாயம்//

தற்காலிகமாய் தவிர்க்க நினைக்கும் மனிதர்களால்,காலத்தின் கட்டாயமாக்கப்பட்ட விசயம் தான்

//இச்சையாய் அனிச்சையாய்
இதயம் கழற்றி எறிந்து
இங்கிதமின்றி அறிக்கைகள்
இரைப்பை நிறைப்புகள்//

இதுவும்....!

மனதில் வார்த்தைகளாய்,கோபங்களாய் திமிறும் சொற்கள் இங்கு கவிதையாய்...!



கூட்ட

கோபிநாத் said...

\\பழகிய நட்புடன்
பகையோ பகை
விலகிய நட்புடன்
இழையோ இழை

நேற்று குலுக்கிய கைகள்
இன்று
நெரிக்கும் கழுத்துகள்\\

இந்த வரிகள் படித்தவுடன் கல்லூரி நினைவுகள் ஞாபகத்துக்கு வந்துடுச்சி!;)

ராமலக்ஷ்மி said...

எடுத்துச் சொல்லியிருக்கும் அத்தனையும் காலத்தின் கட்டாயங்களாய் தவிர்க்க இயலாததாய் மட்டுமல்ல தவிர்க்க நினையாததாய் அமைந்து போய் விட்டது பாசமலர்.

ராமலக்ஷ்மி said...

காலத்தின் கட்டாயங்கள்தான் எத்தனை எத்தனை? 2003-ல் நான் திண்ணை இணைய இதழில் எழுதிய காலத்தின் கட்டாயம். பாருங்க பாசமலர் நேரமிருக்கையில்.

சென்ஷி said...

:)

நல்லாருக்குதுக்கா

நாகை சிவா said...

திருவிழாவில் கூத்து இல்லாட்டி எப்படி!

கட்டாயம் வேணும்ல !

அதான் !

சந்தனமுல்லை said...

நல்ல கவிதை! //தவிர்க்க முடியாத
காலத்தின் கட்டாயம்.// அதே!

பாச மலர் / Paasa Malar said...

முத்து..
புரியாத புதிர்தான்..

ஆமாம் ஆயில்யன்
இயலாமைக் கோபம்

பாச மலர் / Paasa Malar said...

கோபி,
கல்லூரிக் காலத்து நட்பா..கல்லூரி காலத்து அரசியலா..

பாச மலர் / Paasa Malar said...

அவசியம் படிக்கிறேன் ராமலக்ஷ்மி..

நன்றி சென்ஷி..

பாச மலர் / Paasa Malar said...

நம்மளும் இந்தக் கூத்தை விடாமப் பாக்கிறோமே..சிவா..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சந்தனமுல்லை..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சந்தனமுல்லை..

Tech Shankar said...

Klassic Poem.

Good and Kool

கோபிநாத் said...

\\பாச மலர் said...
கோபி,
கல்லூரிக் காலத்து நட்பா..கல்லூரி காலத்து அரசியலா..

March 31, 2009 8:08 AM
\\

நட்பு தான்...ஒரு சின்ன பிரச்சனையில் பெரிய விரிசலாக மாறி பின்பு (சும்மர் 6 மாதம் இருக்கும்) ஒட்டிக்கிச்சி ;))

பாச மலர் / Paasa Malar said...

நன்றி தமிழ்நெஞ்சம், திகழ்மிளிர்..

நட்பின் அழகு அதுதானே கோபி..

Unknown said...

நல்லா இருக்கு.

Divya said...

\\பழைய பாத்திரங்களுடன்
புதிய சரித்திரம்
புதிய மேடையில்
பழைய நாடகம்
தற்காலிக அரங்கேற்றம்.
தவிர்க்க முடியாத
காலத்தின் கட்டாயம்.\\

நச்சுன்னு இருக்கு இந்த வரிகள்:))

தமிழ் said...

/பழைய பாத்திரங்களுடன்
புதிய சரித்திரம்
புதிய மேடையில்
பழைய நாடகம்
தற்காலிக அரங்கேற்றம்.
தவிர்க்க முடியாத
காலத்தின் கட்டாயம். /

உண்மை தான்