இன்று காலை சுமார் 11 மணியளவிலேயே அறிவிப்பு வந்தது..மிக வேகமானதொரு மணற்புயல் ரியாத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக...
ஏதோ ஏப்பை சாப்பைப் புயல் என்று நினைத்திருந்தேன் முதலில்... ஆனால் அடேங்கப்பா...உங்க வீட்டு எங்க வீட்டு மணல் இல்லீங்க...எங்கும் எதிலும் மணல் மூட்டம்....ஊரே அடர்த்தியான கருஞ்சிவப்பு நிறத்தில் இரவு நேரம் மாதிரியாகிவிட்டது நண்பகல் 12 மணி...மாலைவரை தொடர்ந்தது இந்நிலை..இன்னும் கூட காற்றின் வீரியம் குறையவில்லை..
நான் இங்கிருந்த பத்து வருடங்களில் இந்த அளவுக்கு ஒரு மணற்புயலைக் கண்டதில்லை...வித்தியாசமான அனுபவம்தான்..
நான் இங்கிருந்த பத்து வருடங்களில் இந்த அளவுக்கு ஒரு மணற்புயலைக் கண்டதில்லை...வித்தியாசமான அனுபவம்தான்..
24 comments:
ஆமாம்.வித்தியாசமான அனுபவம்.
ஓ.. ஆனா இங்க இன்னும் குளிருதுங்க..:)
இந்தியாவில் இந்த புயல் "தேர்தல்" என்ற பெயரில் வரவிருக்கிறது...
இங்கு கூட இது மாதிரி புயல் வருமென்று சொல்வார்கள். காற்று, மணலை வாரி வாரி இறைக்கும் அவ்வளவுதான். படத்திலுள்ளது போல் பார்த்ததில்லை. முதல் படம் அருமை. அங்கே எடுத்ததா?
அட ஹப்பூபா (Haboob) நேத்து தான் இங்கு இருந்து அனுப்பி வைச்சோம் அதுக்குள்ள அங்க வந்துடுச்சா :)
சூடானில் இது ரொம்பவே சகஜம். நீங்க சொல்வது போன்ற மிக பெஇய மணற்புயல் இங்கு வருடத்திற்கு ஒரு முறை நிச்சயம். நின்று இருந்த ஹெலிகாப்டர் எல்லாம் கவுந்து இருக்கு.. அப்ப பாத்துக்கோங்க அதன் வீரியத்தை
யப்பா..!!!
\\வித்தியாசமான அனுபவம்தான்..\\
அனுபவம் தானே உங்களுக்கு ஆபாத்து ஒன்னும் இல்லையே?
வாங்க பார்சா குமாரன்..
என்ன் ஒரு வித்தியாசமான பெயர் உங்களுக்கு..
இன்னுமா குளிருது தமிழ் பிரியன்..இங்கே இப்போது குளிர் அவ்வளவாக இல்லை..
கீழை ராஸா..அந்தப் புயல்தான் இதைவிட அதிரடியானது இல்லையா..
ஆமாம் சுல்தான்..இங்கே எடுத்த படம்தான்..உண்மையிலேயே இது போன்ற படங்களைப் பார்க்கும் வரை இதன் வீரியம் இந்த அளவுக்குப் புரியவில்லை புயல் வேளையில் வெளியே இருந்த போதும்..
ஆஹா சிவா..உங்க ஊர்லயுமா..ஏதோ புதுசால்லாம் பேர் சொல்றீங்க...
ஒண்ணும் ஆபத்தில்லை கோபி..பள்ளியில்தான் இருந்தேன்..ஏதோ எடிக்கின்ர வீட்டின் நடுவே உட்கார்ந்தது போல் உணர்வு..
பண்புடன் குழுமத்துல சில போட்டாக்கள் பார்த்தேன் அப்போதே நினைத்தேன்... ரொம்ப தொந்தரவா இருக்குமோ.. வீடெல்லாம் மண்ணாயிடும் இல்ல....
ஆமா கிருத்திகா...அப்படியே தூசிதான்...சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
மணற்புயல் வித்தியாசமாத்தான் இருக்கு
மணற்புயலுக்கு இப்படி தான் இங்க சொல்லுவாங்க, அரபி வார்த்தையா இருக்கலாம்....
பத்திரம் நண்பரே.. நீங்கள் கொஞ்சம் சூதானமா இருங்க..
இதை எல்லாம் எப்படிக்கா சமாளிக்கிறிங்க? அந்த நேர்ங்கள்ல வெளிய யாருமே இருக்க மாட்டாங்களா?
ஆமாம் ஜமால்..வித்தியாசமாகத்தான் இருந்தது..
ஆமாம்..சிவா..அரபி வார்த்தையாகத்தான் இருக்கும்.
நன்றி கார்த்திகைப் பாண்டியன்..
சஞ்சய்,
உண்மையில் படங்களைக் காணும் வரை இவ்வளவு மோசமாகத் தோன்றவில்லை..காலை தினம் இயல்பாகத்தான் ஆரம்பித்தது...பள்ளியில் இருந்தேன் நான்..வகுப்பில் இருந்த போது மாணவர்களை வெளியே விடவேண்டாம் என்று அறிவிப்பு வந்தது..வெளியே வந்தால் ஒரே மணல்..இடிபாடுகளுக்கிடையில் சிக்கினாற்போல்...பகல் நேரம் என்பதால் முன்னறிவிப்பு வந்த நேரம் அனைவரும் வெளியேதான் இருந்திருக்க வேண்டும்...ஆனால் நல்லவேளையாக எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை..
நல்ல இருக்கு.sand tunes?ஏதோ
hollywood movie மாதிரி இருக்கு.
உண்மையிலேயே அனுபவமும் சினிமா போலதான் இருந்தது ரவிஷங்கர்..
Post a Comment