என் தலைகோத நேரமில்லை
பிள்ளை தலை வாருவதெங்கே?
பூச்சூட்டிப் பாடசாலைக்கு
அனுப்புவதெங்கே?
சமையல்கட்டில்
சமையல் மணக்கிறதோ
இல்லையோ
பாத்திரங்கள் 'மணக்கிறது'..
தெருமுனைக்கடை
ஷவர்மா* குப்பூஸ்* குஸ்கா
அலுத்துவிட்டது..
அனலாயக் காயும்
காய்ச்சல் பிள்ளைக்கு
என்றாலும்
தனியாய்த் தவிக்கவிட்டுக்
கடமைக்காய் மருந்து கொடுத்துக்
கடமையாற்ற விரைய
வெறுத்துப் போய்விட்டது..
கொட்டிக் கொடுத்து
விமானப் பயணம்
குட்டியாய் முடித்துவர
என்ன கொடுமை சரவணா இது?!
துவைத்தது ஒரு புறம்
துவைக்காதது மறு புறம்
துணிகள் மலையாய்..
சமையல் முதல்
சலவை வரை
அ முதல் ஃ வரை
சகலமும் சடுதியில் செய்து
சலித்துப் போய்விட்டது..
தன் ஐயங்கள் போக்கிட
விளக்கங்கள் அறிந்திடக்
காத்திருந்து காத்திருந்து
என் பிள்ளை
தூங்கியே போய்விட
ஊரார் பிள்ளையை.....
பழமொழி பொருத்தமின்றிப் போக..
தங்கமணியும் பாவம்
தங்கமான மணிதான்
முழுநேரமும் பணியில்
முடங்கிப் போகையிலும்
கூட மாட ஒத்தாசை..
ஆயிரம் இருந்தும்....
சுஜாதா பாலகுமாரன்
வலைப்பூ மல்லிகைப்பூ
இன்னிசை இலக்கியம்
இன்னும்..இன்னும்..
ரசிக்க லயிக்க நேரம்?
கிடைத்த
Money கணக்கில்....
ஆத்ம திருப்தி என்ற பிரம்மையில்
மயங்கிய காலம் போய்த்
தொலைத்த
மணிக்கணக்குகளை
மீட்டெடுக்கும் பணியில்
மூழ்க வேண்டிய நேரமிது! நேரமிது!
*ஷவர்மா *குப்பூஸ் - அரேபிய உணவுகள்
Thursday, December 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
அப்ப money கணக்கு பாத்தது போதும்ன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டீங்களா ? :)
கவுண்டமனி கணக்க விட்டுட்டீங்க
/துவைத்தது ஒரு புறம்
துவைக்காதது மறு புறம்
துணிகள் மலையாய்..
சமையல் முதல்
சலவை வரை
அ முதல் ஃ வரை
சகலமும் சடுதியில் செய்து
சலித்துப் போய்விட்டது../
அருமையான வரிகள்
எத்தனை நாட்கள் ஆகி விட்டது
தங்களின் கவிதை மழையில் நனைந்து
உங்களாள கணக்கை ஒருவகையில முடிக்க முடியும்...ஆனா எங்களை மாதிரி ஆண்களுக்கு!!!! ;(
//கொட்டிக் கொடுத்து
விமானப் பயணம்
குட்டியாய் முடித்துவர
என்ன கொடுமை சரவணா இது?!//
என்ன கொடுமை சார் இது :((
முத்துலட்சுமி,
என் வரையில் அப்படித்தான் தோன்ற்றுகிறது..
SUREஷ்
அதென்ன கவுண்டமணி கணக்கு..ஓ..எதுகை மோனைக்காகச் சொல்றீங்களோ..
நன்றி திகழ்மிளிர்..எதார்த்தம்தான் பேசுகிறது..
ஆஹா..கோபி..உண்மையில் இதை எழுதி முடித்ததும் தங்கமணிகிட்ட இதையேதான் சொன்னேன்..நாங்க நெனச்சா விட்டுடலாம்..பாவம் நீங்க..ஆண்கள் பாவம்தான்..
பெண்களுக்குன்னு சில பழமொழிகள் மாதிரி ஆண்களுக்கும் வச்சுருக்காங்களே...'உத்தியோகம் புருஷ லட்சணம்.''அப்டின்னு..
கொடுமைதான் சிவா..
\\பெண்களுக்குன்னு சில பழமொழிகள் மாதிரி ஆண்களுக்கும் வச்சுருக்காங்களே...'உத்தியோகம் புருஷ லட்சணம்.''அப்டின்னு..\\
அதுக்கு தான் இந்த மாதிரி பழம்மொழிகளில் இருந்து எஸ்கேப்பு ஆகா வேண்டும் போல இருக்கு..!! ;))
வாங்க மலர், எடுத்த முடிவை செயல்படுத்திட்டீங்களா.... வாழ்த்துக்கள்....
கோபி,
நிறைய பழமொழிகள்லருந்து நாம எஸ்கேப் ஆகத்தான் வேணும்..
ஆமா கிருத்திகா..முழுமையாகச் செயல்படுத்த இன்னும் 2 மாதம் போக வேண்டும்..
சிந்திக்க வைத்த கவிதை!
மணிக்கணக்கும் முக்கியம் money கணக்கும் முக்கியம் தான்!!
வரவின்றி செலவேது ...
money வேண்டுமானால் மணி செலவிடத்தான் வேண்டும் ...
ஆழமான கருத்து
அழகான வரிகளில்
இசக்கிமுத்து, அதிரை ஜமால்,
நன்றி..இரண்டு கணக்கும் முக்கியம்தான்..இருந்தாலும் சில நேரம் எது அதிக முக்கியம் என்று நோக்க வேண்டிய கட்டாயம்..தேவைகளின் அடிப்படையை அளவை முன்வைத்து எது அதிகம் முக்கியம் என்று பார்க்க வேண்டியதுதான்..
பாசமலர்,
நல்லா இருக்கு கவிதை.
உங்கள் வலையில் பல பேர் எழுதுவதால் ஒவ்வொறு தடவையும் குழம்பி போய்விடுவேன்.”பெட்டகம்” இன்றுதான் மாதவன் படத்தை வைத்துக் கண்டுபிடித்தேன்.
//கிடைத்த Money கணக்கில்....//
போன தலைமுறை அனுபவித்த ஆத்ம
திருப்தியை இந்த தலைமுறை இழ்ந்து விட்டது. பணம் இருக்கிற்து இப்போது.
//போன தலைமுறை அனுபவித்த ஆத்ம திருப்தியை இந்த தலைமுறை இழ்ந்து விட்டது.//
உண்மைதான் ரவிஷங்கர்..
அன்பின் பாசமலர்,
http://blogintamil.blogspot.com/2009/01/blog-post.html
இதைப் பாருங்கள்..
தொடருங்கள் :)
அன்பின் பாசமலர்
அயலகத்தில் பணி புரியும் பெண்களின் மனநிலை இதுதான். பணம் பணம் என மகிழ்வது சில காலம்தான். மற்றவை மறுக்கப்படும்போது விரக்தி தான் மிஞ்சும். என்ன செய்வது.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அன்பின் பாசமலர்,
உங்களுக்காக ஒர் விருது காத்திருக்கிறது என் வலைதளத்தில்....
http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/blog-post.html
Post a Comment