Saturday, July 11, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 1)

சிலப்பதிகாரம் என்ற மாபெரும் படைப்பு, பெரும்பாலானோர்க்கு ஒரு தவிர்க்க முடியாத பாதிப்பை உருவாக்கி நிற்பது உண்மை. அத்தகைய பாதிப்பு என்னுள்ளும் இருக்கிறது.சிலம்பின் கதை நம் வாழ்வியல் இலக்கணத்தின் படிமங்கள் பலவற்றைத் தொகுத்துச் சொல்கிறது என்றதொரு எண்ணம் எனக்குண்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பல பாடல்கள் பள்ளிப்
பருவம் தொட்டுப் படித்த போதும், முழுமையாக இதனைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. இப்போது படிக்கவும் தொடங்கிவிட்டேன். எனக்குப் புரிந்ததை என் மனதில் பதிந்ததை வலையில் பதியும் ஆர்வம் வந்தது. இணையம் மூலம் பல செய்திகள் கிடைக்கப்பெற்றன. மேலும் மதுரையில் புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த ப. சரவணன் அவர்களின் 'சிலப்பதிகாரம்' என்னும் எளிய உரையும் இம்முயற்சியில் எனக்கு மிகவும் துணையாக நிற்கிறது.
 
இதோ தொடங்கிவிட்டேன். முக்கிய செய்திகள் மட்டும் தொகுக்கும் நோக்கம் காரணமாய் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தையான விளக்கமாய் இல்லாமல் ஒரு தொகுப்பாய் மட்டுமே இருக்குமென்று நினைக்கிறேன். என்றாலும் விடுபட்ட முக்கிய குறிப்புகளை அவ்வப்போது விளக்கவும்முற்பட்டுள்ளேன்.

பதிகம்

குடதிசைச் சேரமண்ணின்
மன்னன் செங்குட்டுவனும்
குணவாயில் கோயிலில்
துறவுக்கோலம் பூண்ட
அவன் தம்பி இளங்கோவும்
மலைவளம் கண்டு களித்துப்
பெரியாற்றங்கரையில்
பேரோய்வில் ஆழ்ந்திருந்த வேளை...

குன்றக்குரவர்
திரளென வந்து
தந்ததொரு செய்தியது
விந்தையிலும் விந்தை!!

பொன்னிற மலர்நிறை
வேங்கை நிழலில்
தன்னொரு முலையிழந்த
நிலையில் நின்றனள்
மங்கையொருத்தி
மாபெரும் பத்தினி.

அவள்முன் தோன்றினன்
தேவர் தலைவன்
இந்திரன்.
இறையெய்திய அவள்தம்
கணவன் திருமுகம்
அவள் கண்முன் காட்டினன்;
பின்
வானூர்தியில்
மங்கையவளுடன்
விண்னுலகம் சென்றனன்.

மெய்யோ இது பொய்யோ?
இந்த விந்தைதான் எதுவோ?
நல்லதோ? கெட்டதோ?
இதன் விளைவுதான் எதுவோ?
விளக்கம் கேட்டு மன்னனை
வினவி நின்றனர்
குன்றக்குரவர்.

சிலம்பு வரிகள்..இங்கே...

(தொடரும்)

17 comments:

ஆ.ஞானசேகரன் said...

நன்று மிக்க நன்றி

நாகை சிவா said...

நல்ல முயற்சி.

வாழ்த்துக்கள்!

தமிழ் said...

வாழ்த்துகள்
தொடருங்கள்

Unknown said...

தொடருங்கள்.பள்ளியில் படித்த “தேரா மன்னா செப்புவது உடையோன்” என்ற
வரி ஞாபகம் வருகிறது.

ராமலக்ஷ்மி said...

அருமையாக இருக்கிறது பாசமலர். நல்வாழ்த்துக்கள். தொடருங்கள்!

ஜீவி said...

அருமையான தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்..
தொடர்ந்து படிக்கிறேன்.
நன்றி.

கோபிநாத் said...

நல்ல முயற்சி.

மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..;)

சென்ஷி said...

:)

தொடருங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

வந்த அனைவருக்கும் நன்றி..உங்கள் வார்த்தைகள் உற்சாகமும் ஊக்கமும் அளிக்கின்றன..

RATHNESH said...

நல்ல முயற்சி. அடுத்த தலைமுறைக்கான நல்ல தமிழ்ச் சேவை. எளிய தமிழின் அழகான தொடுப்பு. வாழ்த்துக்கள். தொடர்ந்து படிக்கத் தயாராகி விட்டோம்.

"உழவன்" "Uzhavan" said...

கலக்கிட்டீங்க. நல்லாருக்கு

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ரத்னேஷ், உழவன்..

உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கு..

கிருத்திகா ஸ்ரீதர் said...

great started something very big and interested... atleast a life time dream in everyone's life. Wishes Malar (have some problem in tamil keyboard..)

பாச மலர் / Paasa Malar said...

வாங்க கிருத்திகா...ஆமாம்..miles to go..

RATHNESH said...

சிலம்"பூ" எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மலரும்?

பாச மலர் / Paasa Malar said...

ரத்னேஷ்,

இதோ இன்று வந்து விட்டது அடுத்த பகுதி..தேர்வுத்தாள் திருத்தும் பணியால் சற்றே தாமதம்..

குமரன் (Kumaran) said...

அருமையான தொடக்கம் பாசமலர். நானும் என் பல நாள் வேட்கையைத் தீர்க்க இந்த முறை மதுரை சென்றிருந்த போது சர்வோதய இலக்கியப் பண்ணையில் சிலப்பதிகாரம் உரையுடன் நூலை வாங்கி வந்திருக்கிறேன். விரைவில் படிக்கத் தொடங்குவேன்.