எதிர்காலக் கனவுகளில்
வீணாகின்றன
பல நிகழ்கால நிஜங்கள்.
ஊருக்கு உணவு படைத்து
வீட்டுக்கு வந்த
உணவகச் சமையல்காரன்
வீட்டின் அடுப்பில்
தூங்குகிறது பூனை.
'நொடிகள் சேமிப்பது எப்படி?'
மணிக்கணக்கில் பேசினார்
விழாப் பேச்சாளர்.
'ஆண்டவா!
எல்லோரும் நல்லா இருக்கணும்'
ஆலயத்தில் வேண்டிவிட்டு
வெளியே வந்தவர் வேட்டியில்
சேற்றை வாரிச் சென்ற
வாகன ஓட்டுனரைச் சாடினார்..
'நாசமாப் போறவனே!'
'...கிராமத்தில் பால்ய விவாகம்'
செய்தி கேட்டுப்
பாவப்படுகிறாள் பருவக்குமரி.
பொறாமைப்படுகிறாள் முதிர்கன்னி.
போகியன்று
எஜமானி கழித்த
பழைய ஆடைகள்
பொங்கலன்று
வேலைக்காரி வீட்டில்
புத்தாடைகள்.
Sunday, February 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
/எதிர்காலக் கனவுகளில்
வீணாகின்றன
பல நிகழ்கால நிஜங்கள்./
/நொடிகள் சேமிப்பது எப்படி?'
மணிக்கணக்கில் பேசினார்
விழாப் பேச்சாளர்./
/ஆண்டவா!
எல்லோரும் நல்லா இருக்கணும்'
ஆலயத்தில் வேண்டிவிட்டு
வெளியே வந்தவர் வேட்டியில்
சேற்றை வாரிச் சென்ற
வாகன ஓட்டுனரைச் சாடினார்..
'நாசமாப் போறவனே!'/
/'...கிராமத்தில் பால்ய விவாகம்'
செய்தி கேட்டுப்
பாவப்படுகிறாள் பருவக்குமரி.
பொறாமைப்படுகிறாள் முதிர்கன்னி./
அத்தனையும் அருமை
அதிலும் கல்யாணத்திற்கு பற்றி வரிகள் தான் கருத்தைத் தொட்டது.
தொடரட்டும்
அனைத்துமே அட்டகாசம் ;)))
\\...கிராமத்தில் பால்ய விவாகம்'
செய்தி கேட்டுப்
பாவப்படுகிறாள் பருவக்குமரி.
பொறாமைப்படுகிறாள் முதிர்கன்னி.\\\
உண்மை.
"ஆண்டவா!
எல்லோரும் நல்லா இருக்கணும்'
ஆலயத்தில் வேண்டிவிட்டு
வெளியே வந்தவர் வேட்டியில்
சேற்றை வாரிச் சென்ற
வாகன ஓட்டுனரைச் சாடினார்..
'நாசமாப் போறவனே!'"
நல்லாருக்கு...
"'...கிராமத்தில் பால்ய விவாகம்'
செய்தி கேட்டுப்
பாவப்படுகிறாள் பருவக்குமரி.
பொறாமைப்படுகிறாள் முதிர்கன்னி."
கனமா இருக்கு....
முரண்கள் பலவிதம்தான். ஒவ்வொன்றையும் நீங்கள் கூறியிருக்கும் விதம்...அருமை. அவற்றில் பொதிந்திருக்கிறது மறுக்க முடியாத உண்மை.
முரண்கள் பலவிதம்தான். ஒவ்வொன்றையும் நீங்கள் கூறியிருக்கும் விதம்...அருமை. அவற்றில் பொதிந்திருக்கிறது மறுக்க முடியாத உண்மை.//
கன்னா பின்னான்னு ரிப்பீட்டிக்கிறேன் பாசமலர்.
நீங்க தொடர்ந்து விடாம எழுதுங்கப்பா!!
திகழ்மிளிர்,
இதுபற்றித் தானாக வந்த கருத்துகளும் சரி 'உட்கார்ந்து யோசித்தாலும் சரி..எதிர்மறையாகவே வருகின்றன..
கோபி, கிருத்திகா,
கனமான உண்மைதான்..
ராமலக்ஷ்மி, புதுகை,
உண்மைகள் முரணாகத் தெரிவதே ஒரு முரணாகத் தெரிகிறது இல்லையா..
கவிதையோடு நல்ல சிந்தனைகளும்
நன்றி
சூர்யா ஜிஜி
பஹ்ரைன்
//எதிர்காலக் கனவுகளில்
வீணாகின்றன
பல நிகழ்கால நிஜங்கள்.//
100 க்கு 100 சரிங்க... நாம் வளர்க்கப்பட்ட முறை காரணமாக இருக்குமோ. முடிந்த வரை நிகழ்காலத்தில் வாழ முயற்சி செய்கிறேன்.
//...கிராமத்தில் பால்ய விவாகம்'
செய்தி கேட்டுப்
பாவப்படுகிறாள் பருவக்குமரி.
பொறாமைப்படுகிறாள் முதிர்கன்னி.//
சாதாரண வார்த்தைகளில் மிக பெரிய செய்தி பதுங்கி இருப்பது வருத்தம் அளிக்குது.
நன்றி சூர்யா ஜிஜி
சிவா,
நிகழ்காலத்தில் வாழ்வதுதான் என்றும் நல்லது..நீங்கள் சொல்வது போல எதிர்காலம் பற்றிப் பயமுறுத்தியே நம்மை வளர்த்துவிட்டார்கள்..
எத்தனை விதமான முரண்களுக்கு மத்தியில் வாழ வேண்டி இருக்கு.. ஹ்ம்.. நன்றாக எழுதியிருக்கீங்க.. மலர்.
Post a Comment