பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த பொன்முடி கொடுத்த அதிரடி பதில் அறிக்கை படிக்கையில் ஏதோவொரு சந்தோஷம்...ஆஹான்னு...ஏன்?
ரஜினி பேட்டி பார்த்தபோது..நான் வந்தாலும் வருவேன், வராட்டியும் இருப்பேன் என்று நம் வானிலை அறிக்கை மாதிரிப் பேசிய போது அட....போங்கய்யா...நீங்களும் உங்க ரசிகர் மன்ற சந்திப்பும்...வருத்தம் தெரிவித்தாராம் மன்னிப்புக் கேட்கவில்லையாம்...எதார்த்தம் துளிக் கூட எட்டிப் பார்க்காத அப்படி ஒரு சந்திப்பு... ஏதோவோர் சலிப்பு..அடச்சீன்னு..ஏன்?
என்னதான் இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை, நடிகர்கள் உண்ணாவிரதம், நன்கொடை வசூலிப்பு என்று ஆயிரம் இருந்தும்....No peace of mind...இதெல்லாம் எவ்வளவு தூரம், எத்தனை காலம் என்ற நெருடலும் ஆதங்கமும்...நிஜமான அமைதி என்று கிட்டும் என்ற எதிர்பார்ப்பும்....ஐயோன்னு..ஏன்?
என்னதான் கும்ப்ளே நல்ல ஆட்டக்காரர் என்றாலும், இதே போல் முடிவெடுத்துச் சீக்கிரம் பெரிசுங்களும் இளசுங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை (நப்பாசை?)...அப்பாடான்னு..ஏன்?
Tuesday, November 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
எனக்கென்னவோ இந்த முறை வானொலி அறிக்கை பொய்க்காது மழை பெய்து விடும் என்றுதான் தோன்றுகிறது:)!
அப்படியா சொல்கிறீர்கள் ராமலக்ஷ்மி..நடக்கட்டும் நடக்கட்டும்..
இலங்கைத் தமிழர் விஷயம், இந்த முறை சரியான இலக்கு நோக்கிப் போவதாகவே எண்ணத் தோன்றுகிறது.
ரஜினி ஒரு மாதிரி என்பது அனைவரும் அறிந்ததே. (மாதிரி என்றால் மாடல் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்)
கும்ப்ளே பற்றிய வரிகளில் ஒரு ஞாநியின் வெளிப்பாடு தெரிகிறது. (ஞாநி என்றால், தெளிந்த அறிவுடையவர் என்று அர்த்தம் சொல்வார்கள்).
//நான் வந்தாலும் வருவேன், வராட்டியும் இருப்பேன் என்று நம் வானிலை அறிக்கை மாதிரிப் பேசிய போது...//
படித்தோம்...ரசித்தோம்...:-)
-கார்த்தி
ஓஓ இப்படி எல்லாம் பதிவு போடலாமா - நெரெயக் கத்துக்கணும்பா
இந்த ஆஹா விஷயம் தான் தெரியல..!
//இலங்கைத் தமிழர் விஷயம், இந்த முறை சரியான இலக்கு நோக்கிப் போவதாகவே எண்ணத் தோன்றுகிறது.//
அப்படி நடந்தால் நல்லது..நடக்க வேண்டும்..
நன்றி யாரோ கார்த்தி..
ஆஹா சீனா சார்...என்ன இப்படி சொல்லிட்டீங்க..
என்ன கோபி..ஆஹா விஷயம் ஏன் ஆஹான்னு புரியலியா..இல்ல விஷயமே என்னன்னு தெரியலியா..தெரிஞ்சுக்கோங்க...
\\\என்ன கோபி..ஆஹா விஷயம் ஏன் ஆஹான்னு புரியலியா..இல்ல விஷயமே என்னன்னு தெரியலியா..தெரிஞ்சுக்கோங்க...\\
உண்மையாக தெரியலைக்கா...லிங் ஏதாச்சும் இருந்த கொடுங்க ;)
பொன்முடி ஜெயலலிதாவுக்கு ஓர் அறிக்கை கொடுத்திருந்தார்..போன வாரச் சூடான செய்தி இதுதான்..லிங்க் என்னவென்று தெரியவில்லை...நாளிதழ்களைப் புரட்டினால் ஒரு வேளை கிடைக்கும்..
Post a Comment