சனவரி மாதம் 15 ம் நாள் வெள்ளியன்று 'வளைகுடா செந்தமிழ்ச் சங்கம்' - துவக்கவிழா, பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா இனிதே நடைபெற்றது. வார இறுதியான ஒவ்வொரு வியாழன் மாலை முதல் நள்ளிரவு வரை மகிழகம் ஒன்றில் சுமார் 50 பேர் தவறாமல் சந்தித்துக் களிப்பது கடந்த நான்கு ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு வாரமும் நிகழும் இந்தச் சந்திப்பை, எங்களுக்கும் இன்னும் பலருக்கும் பயனுள்ள வகையில் மாற்றும் எண்ணம் அனவருக்கும் ஏற்பட 'வசெந்தம்' மலர்ந்தது.
ஒவ்வொரு முறையும் அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடி மகிழும் நாங்கள், இந்த முறை வழக்கமான நண்பர்கள் மட்டுமல்லாமல் பல புது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினோம். உறியடித்தல், கபடி விளையாட்டு, கோலப்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு, தமிழ்ச் சொல் விளையாட்டு,சிறுவர்களுக்கான பேச்சுப்போட்டி, பட்டி மன்றம், கிராமிய நடனம், பொங்கல் பண்டிகையின் சிறப்பை விளக்கும் நாடகம் என்று மிகவும் இனிதே நடந்தேறியது இவ்விழா.
சங்கத்தின் சமுதாயப் பணி குழுமத்தின் சார்பில், பொங்கல் நாளில், கோயம்புத்தூர் ஆசிரமம் ஒன்றில் மரக்கன்றுகள் நடும் பணியும் இனிதே நிறைவேற்றப்பட்டது. 2010 ஆண்டில் 2010 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும்...என்ற உறுதியும் மேற்கொள்ளப்பட்டது.
மொத்தத்தில் இந்தத் தினம் மறக்க முடியாத முத்திரை பதித்து நிற்கிறது.
உறியடித்தல்
குழந்தைகள் விளையாட்டு
கபடி விளையாட்டு
Friday, January 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
விழாவைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி பாசமலர்.
//2010 ஆண்டில்
2010 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும்...என்ற உறுதியும் மேற்கொள்ளப்பட்டது.//
இது நிறைவேறவும் வாழ்த்துக்கள்!
கலக்கல் ;)))
\\உறியடித்தல், கபடி விளையாட்டு\\
இது ரெண்டுமே சூப்பராக இருக்குமே..;))
Post a Comment