ஒரு நதி
இரண்டு பங்கீடு
இரண்டு பக்கமும்
இடிவாங்கும் மிருதங்கமாய்
மத்திய அரசு
இரட்டைத் தலைவலியுடன்
இருமாநில அரசு..
மக்கள் நலம்(?!) ஒரு பக்கம்.
கட்சி நலம் மறு பக்கம்.
நாணயத்தின் இரண்டு பக்கம்.
இரட்டை வேடம்
இரு மொழி நடிகர்க்கு..
வாழ வைக்கும் தமிழர்
சொந்த மண்ணின் சொந்தங்கள்
இரண்டு பேரிடமும் நல்ல பெயர்
இரண்டு பத்து ஆண்டுக்காவது
இன்னும் வேண்டும்.
இரண்டு பக்கமும்
திரைப்படங்கள்
வெற்றிவாகை சூட வேண்டும்.
அதற்காகவாவது
இரட்டை வேடமிட்டு
இரண்டு மனதை ஒன்றாக்கி
இரட்டை நாக்கில்
இரட்டிப்பு இரட்டிப்பாய்
வசனம் பேச வேண்டும்.
இருபக்க விவசாயத் தோழர்தான்
இருதலைக் கொள்ளி எறும்பு..
நம்பி விதைப்பதா
நம்பிக் கெடுவதா..
இரட்டைக் குழப்பம்.
மொத்தத்தில் இவ்வழக்கில்
இரு மாநிலத்தின்
இருவேறு தீர்ப்பும்
இப்படியிருந்தால்
எப்படியிருக்கும்?
மழை பெய்கையில்
அணைக்கு இந்தப்பக்கம்
இரட்டைத் தாழ்..
மழை பொய்க்கையில்
அணைக்கு அந்தப்பக்கம்
இரட்டைத் தாழ்..
இரட்டைத் தாழ்..
இரட்டை நிலை மாற
இன்னும் நூற்றாண்டு
இரண்டாவது கழிய வேண்டும்.
அதுவரை காவிரி
இருபக்கமும் அலைபாய்ந்து
விவசாயம் காக்க வேண்டும்.
28 comments:
எத்தன ரெண்டு...
இதுவும் நல்லாத்தான் இருக்கு...
(வடிவேலு பாணியில் படிக்கவும்)
கொன்னுட்டீங்க மலர்.. ஆமா உஷா ராமச்சந்திரன் பதிவு படிச்சீங்களோ...(ஆமாம் அது என்ன வ.வா.சங்கப்போட்டி)
ஒரு கல்கோனா மிட்டாய் வாங்கிட்டு வந்து ரென்று குழந்தைகளைப் பார்த்துவிட்டால், காக்கா கடி கடித்து இரண்டாக்கிக் கொடுப்பதில்லையா? அதைத் தான் நடுவண் அரசாங்கம் செய்யவேண்டும் என்று நல்லவர்கள் நினைக்கிறார்கள்.
இந்தச் சுட்டிகளைப் பாருங்கள்,
http://athivettijothibharathi.blogspot.com/2008/04/blog-post_17.html
http://jothibharathi.blogspot.com/2008/04/blog-post_10.html
http://jothibharathi.blogspot.com/2008/04/blog-post.html
கோபமும், தண்ணீர் கொடுக்கும் சக்தியும் ஒரு சாராருக்கு மட்டும் இருந்தால், மற்றவர் முதலாமவர்க்கு அடிமை என்று அர்த்தப்படுகிறது.
இதை நீக்க நடுவண் அரசு தலையிட்டால் நல்லது. தங்கள் உணர்வுகள் புரிந்துகொள்ளக் கூடியவை.
அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.
பாச மலர் மேடம்,
நல்ல கருத்துள்ள கவிதை !
//இரண்டு பக்கமும்
இடிவாங்கும் மிருதங்கமாய்
மத்திய அரசு//
மத்திய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் முடிவெடுக்க திணரும் பூனை.. இரண்டு பக்கமும் பாயாமல் அது பாட்டுக்கு நடந்து போய்கொண்டிருக்கிறது என்று சொல்லலாமோ ?
:)
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
கவிதை நன்றாக உள்ளது.
கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பரிசு உண்டு.
நன்றி சொக்கரே..
கிருத்திகா,
சுட்டி இருக்கிறதே..வருத்தப்படாத வாலிபர் சங்கம்..இரண்டாவது ஆண்டுவிழாவுக்காக அறிவித்துள்ள போட்டி இது..
நன்றி ஜோதிபாரதி
கோவி,
கவலைப்படாவிட்டாலும் படுவது போல நடித்தாக வேண்டுமே..
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி புகழன்..
வாழ்த்துக்கள் அக்கா ;))
கருத்துள்ள கவிதை ரொம்ப நல்லாயிருக்குதுங்க பாச மலர்.
போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
\\திரைப்படங்கள்வெற்றிவாகை சூட வேண்டும்.அதற்காகவாவதுஇரட்டை வேடமிட்டுஇரண்டு மனதை ஒன்றாக்கிஇரட்டை நாக்கில்இரட்டிப்பு இரட்டிப்பாய் வசனம் பேச வேண்டும்.\\
ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க இந்த வரிகள்!!
பாராட்டுக்கள் பாச மலர்!!
நல்லாயிருக்குங்க கவிதை:)
romba nalla irukku :)
analum kobam than varuthu. sila rettai veda (na)tharikalai parthu
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
இங்கயும் ரெண்டா:)
மலர் விவரமா அலசிட்டீங்க. உண்மைதான். எல்லோருக்கும் சாதகமா யார் தீர்ப்பு சொல்லப் போறாங்க. கஷ்டம்தான்.
நன்றி திவ்யா, ரசிகன், சென்ஷி, நிஜமா நல்லவன்.
ஆமாம் வல்லி மேடம். சுமுகமான தீர்ப்பு சாத்தியமில்லை தற்போது என்றுதான் தோன்றுகிறது.
நன்றி கோபி..
அருமையான கவிதை... ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால். அதில் பலன் பெருபவர்களில்் ஒருவன் என்ற வகையில் இந்த கவிதைக்கு ஒரு சபாஷ்.
/ஒரு நதி
இரண்டு பங்கீடு
இரண்டு பக்கமும்
இடிவாங்கும் மிருதங்கமாய்
மத்திய அரசு
இரட்டைத் தலைவலியுடன்
இருமாநில அரசு..
மக்கள் நலம்(?!) ஒரு பக்கம்.
கட்சி நலம் மறு பக்கம்.
நாணயத்தின் இரண்டு பக்கம்.
இரட்டை வேடம்
இரு மொழி நடிகர்க்கு..
வாழ வைக்கும் தமிழர்
சொந்த மண்ணின் சொந்தங்கள்
இரண்டு பேரிடமும் நல்ல பெயர்
இரண்டு பத்து ஆண்டுக்காவது
இன்னும் வேண்டும்.
இரண்டு பக்கமும்
திரைப்படங்கள்
வெற்றிவாகை சூட வேண்டும்.
அதற்காகவாவது
இரட்டை வேடமிட்டு
இரண்டு மனதை ஒன்றாக்கி
இரட்டை நாக்கில்
இரட்டிப்பு இரட்டிப்பாய்
வசனம் பேச வேண்டும்.
இருபக்க விவசாயத் தோழர்தான்
இருதலைக் கொள்ளி எறும்பு..
நம்பி விதைப்பதா
நம்பிக் கெடுவதா..
இரட்டைக் குழப்பம்.
மொத்தத்தில் இவ்வழக்கில்
இரு மாநிலத்தின்
இருவேறு தீர்ப்பும்
இப்படியிருந்தால்
எப்படியிருக்கும்?
மழை பெய்கையில்
அணைக்கு இந்தப்பக்கம்
இரட்டைத் தாழ்..
மழை பொய்க்கையில்
அணைக்கு அந்தப்பக்கம்
இரட்டைத் தாழ்..
இரட்டை நிலை மாற
இன்னும் நூற்றாண்டு
இரண்டாவது கழிய வேண்டும்.
அதுவரை காவிரி
இருபக்கமும் அலைபாய்ந்து
விவசாயம் காக்க வேண்டும்./
கவிதை
மொத்தமும்
அருமை
வாழ்த்துக்கள்
நல்ல கவிதை...
வெற்றி பெற வாழ்த்துகள்!!!
கருத்துள்ள கவிதை....
வெற்றிபெற வாழ்த்துகள்....
Senthil,
Bangalore
மலர் மிக அருமையான கவிதை இன்றைய சூழலுக்கு ஏற்றமாதிரி!
ரெண்டு போட்டிக்கும் பொருத்தமாக இருக்கு
சஞ்சய், திகழ்மிளிர், வெட்டிப்பயல், sen22, கண்மணி..
நன்றி..வருகைக்கும் கருத்துக்கும்..
nathionru vithi thedi-a deceptive title.The contents are fine.Dr.Mohan.
nalla irukku
Post a Comment